world

img

தாய்லாந்தில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில்  வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், இன்று ஏற்பட்ட திடீர் பள்ளம் சுமார் 164 அடி ஆழமும், 900 சதுர மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவிலை என்று கூறப்படுகிறது.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைக்கு அடியில் இருந்த கழிவுநீர் குழாய் அதிகப்படியான அழுத்தத்தால் வெடித்து இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.